3 நாள் சரிவுக்கு பின் மீண்டும் உயர்வு: தங்கம் சவரன் 31,000ஐ தாண்டியது: நேற்று ஒரே நாளில் 216 அதிகரிப்பு

" alt="" aria-hidden="true" />


சென்னை:


தொடர்ந்து 3 நாட்களாக சரிந்து வந்த தங்கம் விலை நேற்று மீண்டும் சவரனுக்கு 216 அதிகரித்தது. சவரன் 31,000ஐ தாண்டியது. அட்சய திருதியை  சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப தங்கம் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் ஏற்பட்டு வருகிறது.  கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில் ஒரு சவரன் 29,880 ஆக இருந்தது. சில நாட்களிலேயே கிடுகிடுவென உயர்ந்து 31,000ஐ தாண்டியது. பின்னர் சற்று சரிந்து கடந்த 1ம் தேதி 31,376க்கு விற்கப்பட்டது. இது இதுவரை இல்லாத புதிய உச்சமாக கருதப்பட்டது. இந்நிலையில் தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கம் விலை கடந்த 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை தொடர்ந்து 3 நாட்களில் 288 சரிந்தது. இந்நிலையில் நேற்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது.

நேற்று மாலை நிலவரப்படி சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் கிராமுக்கு 27 அதிகரித்து 3,889க்கும், சவரனுக்கு 216 உயர்ந்து 31,112க்கும் விற்பனையானது. சர்வதேச சந்தையில் ஒரு டிராய் அவுன்ஸ் (31.10 கிராம்) தங்கம் நேற்று 1,574 டாலராக அதிகரித்து விட்டது.  இதுகுறித்து சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க கவுரவ செயலாளர் எஸ்.சாந்தகுமார் கூறுகையில், ‘‘சர்வதேச சந்தையில் தங்கம் விலை அதிகரித்துள்ளது. அது மட்டுமின்றி, வரும் ஏப்ரல் மாதம் அட்சய திருதியை வருவதை முன்னிட்டு, இப்போதே நகை உற்பத்தி தொடங்கி விட்டது. இதனால், தங்கம் விலை தொடர்ந்து அதிகரிக்கவே செய்யும். அட்சய திருதியைக்குள் ஒரு கிராமுக்கு 75 உயர வாய்ப்புகள் உள்ளன’’ என்றார்.


Popular posts
ஹைட்ரோ கார்பன் ஆய்வுக்கு மத்திய அரசு சலுகை - தமிழ்நாடு முஸ்லிம் லீக் கடும் கண்டனம்
தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கிரிமிநாசினி தெளிப்பான் அரங்கம் அமைக்கப்பட்டது
Image
ஆம்பூரில் 144தடை உத்தரவை பின்பற்றாத பல்பொருள் அங்காடி மற்றும் தேநீர் கடைகளுக்கு சீல் வட்டாட்சியர் நடவடிக்கை
Image
மத்திய - மாநில அரசுகளின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பீர்!* *முஸ்லிம் சமுதாய மக்களுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் வேண்டுகோள்!!!*
Image