ஆம்பூரில் 144தடை உத்தரவை பின்பற்றாத பல்பொருள் அங்காடி மற்றும் தேநீர் கடைகளுக்கு சீல் வட்டாட்சியர் நடவடிக்கை
ஆம்பூர் மார்ச் 29 :திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சந்தப்பேட்டை மசூதி தெருவில் இயங்கிவரும் வடமாநிலத்தை சேர்ந்த ஸ்ரீ அம்பிகா பல்பொருள் அங்காடி மற்றும் ஓ.வி. ரோட்டில் தட்சிணாமூர்த்தி என்பவருக்கு சொந்தமான தேநீர் கடையில் அதிகளவில் மக்கள் கூடியதால் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக போடப்பட்டுள்ள 144 தடை உத்தரவை பின்பற்றாததால் ஆம்பூர் வட்டாட்சியர் செண்பகவல்லி மற்றும் வருவாய் துறையினர் அங்காடிக்கு சீல் வைத்தனர்.