கும்மிடிப்பூண்டி அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை-பணம் திருட்டு
கும்மிடிப்பூண்டி, 

 

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ளது அய்யர்கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி (வயது 32). தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் வழக்கம் போல முனுசாமி வேலைக்கு சென்றுவிட்டார். குடும்பத்தினர் அனைவரும் வெளியே சென்றபோது வீட்டை பூட்டிவிட்டு சென்றனர்.


 


மாலை 6 மணியளவில் முனுசாமியின் தாய் இந்திராணி வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

 

நகை-பணம் திருட்டு

 

வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து அதில் இருந்த 11 பவுன் நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

 

நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்து வந்திருந்த கைரேகை நிபுணர்கள் முக்கிய தடயங்களை சேகரித்தனர்.

 

இது குறித்து கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் கவரைப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகிறார்.



Popular posts
3 நாள் சரிவுக்கு பின் மீண்டும் உயர்வு: தங்கம் சவரன் 31,000ஐ தாண்டியது: நேற்று ஒரே நாளில் 216 அதிகரிப்பு
Image
ஆம்பூரில் 144தடை உத்தரவை பின்பற்றாத பல்பொருள் அங்காடி மற்றும் தேநீர் கடைகளுக்கு சீல் வட்டாட்சியர் நடவடிக்கை
Image
வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் ஆர். எஸ். ராஜேஷ் அவர்கள் 24 மணி நேரத்தில் நேதாஜி நகர் வாழ் பொதுமக்களுக்கு மார்க்கெட் அமைத்துக் கொடுத்தார்
Image
சென்னை சில்க்ஸ்: கும்பகோணத்தில் உள்ள தி சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை நிறுவனம் சார்பில் நகராட்சி அம்மா உணவகத்திற்கு தேவையான உணவு பொருட்களை வழங்கினர்
Image