8 வீடுகள் எரிந்து நாசம்: பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி
திருவள்ளூர், 

 

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் கீழச்சேரி அருந்ததிபுரம்  பகுதியில் பாலாஜி, சத்யா, சூர்யா, ராஜா, வெங்கடேசன், சந்திரன், கோபி, சுரேஷ் உள்ளிட்ட 8 பேர்களின் வீடுகளில் நேற்று முன்தினம் தீ விபத்து ஏற்பட்டது.


 



இதில், வீடுகளில் உள்ள பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி நாசமாகின. இந்தநிலையில் தீ விபத்தால் வீடுகளை இழந்த குடும்பத்தினரை அ.தி.மு.க. கடம்பத்தூர் ஒன்றியக்குழு தலைவர் சுஜாதா சுதாகர், கடம்பத்தூர் ஒன்றிய செயலாளர் சூரகாபுரம் கே.சுதாகர் ஆகியோர் நேரில் சென்று சந்தித்து அரிசி மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினார்கள்.

 

இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் துணை தாசில்தார் வெங்கடேஷ், வருவாய் ஆய்வாளர் சொர்ணலதா, ஒன்றிய அவைத்தலைவர் இன்பநாதன், கூவம் சரவணன், மாவட்ட பிரதிநிதிகள் அழிஞ்சிவாக்கம் பாசூரான், கண்ணூர் சீனிவாசன், சின்னா கீழச்சேரி ஊராட்சி மன்ற தலைவர் தேவி கலா தேவா, துணைத்தலைவர் சந்தோஷ் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.




Popular posts
தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கோடி மதிப்பிலான வென்டிலேட்டர் கருவிகளை தமிழக துணை முதல்வர் வழங்கினார்
Image
வேப்பூர் அருகே தீயில் எரிந்த வீட்டிற்கு நிவாரண உதவி
Image
வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் ஆர். எஸ். ராஜேஷ் அவர்கள் 24 மணி நேரத்தில் நேதாஜி நகர் வாழ் பொதுமக்களுக்கு மார்க்கெட் அமைத்துக் கொடுத்தார்
Image
மத்திய - மாநில அரசுகளின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பீர்!* *முஸ்லிம் சமுதாய மக்களுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் வேண்டுகோள்!!!*
Image
தஞ்சை மாவட்ட ஆட்டோ தொழிலாளர் முன்னேற்ற சங்க உறுப்பினர்களுக்கு திமுக சார்பில் நிவாரண நிதி வழங்கினர்
Image