தஞ்சை மாவட்ட ஆட்டோ தொழிலாளர் முன்னேற்ற சங்க உறுப்பினர்களுக்கு திமுக சார்பில் நிவாரண நிதி வழங்கினர்

தஞ்சை மாவட்ட ஆட்டோ தொழிலாளர் முன்னேற்ற சங்க உறுப்பினர்களுக்கு திமுக சார்பில் நிவாரண நிதி வழங்கினர்.


கும்பகோணம், ஏப்.4-
தஞ்சை மாவட்ட ஆட்டோ தொழிலாளர் முன்னேற்ற சங்க உறுப்பினர்களுக்கு திமுக சார்பில் நிவாரண நிதி வழங்கினர்.
கரோனா வைரசால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் கும்பகோணம் பகுதியில் வருமானமின்றி அவதிப்பட்டுவரும் தஞ்சை மாவட்ட ஆட்டோ தொழிலாளர்கள் முன்னேற்றச் சங்க உறுப்பினர்கள் நிதியுதவி வழங்கும்படி எம்எல்ஏ அன்பழகனை சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள 200 ஆட்டோ டிரைவர்களுக்கு தலா ரூபாய் ஆயிரம் வீதம் எம்எல்ஏ அன்பழகன் தனது சொந்த நிதியில் இருந்து வழங்கினார். அப்போது ஆட்டோ டிரைவர்கள் முகக்கவசம் அணிந்து கொண்டு சமூக இடைவெளியை கடைபிடித்தனர்.
இந்நிகழ்ச்சியில் நகர, ஒன்றிய செயலாளர்கள் தமிழழகன், கணேசன், அசோக்குமார்,  ஆட்டோ தொமுச செயலாளர் அருண், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் அனந்தராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


" alt="" aria-hidden="true" />


Popular posts
வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் ஆர். எஸ். ராஜேஷ் அவர்கள் 24 மணி நேரத்தில் நேதாஜி நகர் வாழ் பொதுமக்களுக்கு மார்க்கெட் அமைத்துக் கொடுத்தார்
Image
சென்னை சில்க்ஸ்: கும்பகோணத்தில் உள்ள தி சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை நிறுவனம் சார்பில் நகராட்சி அம்மா உணவகத்திற்கு தேவையான உணவு பொருட்களை வழங்கினர்
Image
தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கிரிமிநாசினி தெளிப்பான் அரங்கம் அமைக்கப்பட்டது
Image
மத்திய - மாநில அரசுகளின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பீர்!* *முஸ்லிம் சமுதாய மக்களுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் வேண்டுகோள்!!!*
Image
வேப்பூர் அருகே தீயில் எரிந்த வீட்டிற்கு நிவாரண உதவி
Image